தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருவூலத்துறைக்கு எதிராகப் போராடப் போவதாக ஆசிரியர்கள் சார்பில் அறிவிப்பு! - teachers announced protest

சென்னை: ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் தர மறுக்கும் கருவூலத்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

teachers
teachers

By

Published : Jun 21, 2020, 1:32 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில், மாநில கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில்,

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பள்ளி மனு
'தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலைப் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்வித்தகுதிக்காக, அவர்களது பணிக்காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், சார்நிலைக் கருவூல அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வை அரசாணையைக் காட்டி அளிக்க மறுத்து வருகின்றனர்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பள்ளி மனு (2)
மாநிலம் முழுவதும் எழுந்துள்ள இப்பிரச்னையால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தெளிவுரை, வழிகாட்டுதல் வழங்கி உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.

இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு கிடைக்காத நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டம், சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பாக எங்களது அமைப்பின் சார்பில் போராட்டம், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details