தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பம் - டெட் எக்ஸாம்

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பம்

By

Published : Mar 8, 2022, 10:57 AM IST

சென்னை:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதுவதற்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதி தேர்வை நடத்தும் தேர்வு முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள் 1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் 2 ஆகியவை தனித்தனியாக தேர்வு நடத்தப்படும்.

தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதலாம். கல்வி தேர்வு 3 மணிநேரம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது.

மேலும் மாணவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏப்ரல் 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணமாக 500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ , மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் வகுப்பினர் தேர்வுக் கட்டணமாக 750 ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் போன்ற அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படின் தேர்வு மையம் அதிகரிக்கப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 150 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் எடுப்பவர்கள் தகுதி பெற்றவர்கள். பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழில் வாழ்நாள் முழுவதும் செல்லும். தேர்வு எழுத விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை அளித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதி தேர்வின் போது ஒழுங்கீன செயலில் ஈடுபடும் சிறுவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கும் தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஸ்டெம்' துறைகளில் பெண்கள் முன்னேற்றம்: நாடு தழுவிய அளவில் சென்னை ஐஐடியும் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details