தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டான்செட் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - டான்செட் தேர்வு விண்ணப்பம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ./ எம்.டெக். / எம்.ப்ளான் உள்ளிட்ட மேல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு சார்பாக அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது.

TANCET 2021
TANCET 2021

By

Published : Jan 6, 2021, 7:48 PM IST

’டான்செட்' எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதிகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ./ எம்.டெக். / எம்.ப்ளான் உள்ளிட்ட மேல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு சார்பாக அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டுக்கான (2021 - 2022) தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டான்செட் தேர்வுக்கு வருகிற ஜனவரி 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவங்களை tancet.annauniv.edu எனும் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாணவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மார்ச் 5ஆம் தேதி மாணவர்கள் தேர்வு நுழைவுச் சீட்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை அணுகலாம்.

https://tancet.annauniv.edu/tancet/

ABOUT THE AUTHOR

...view details