தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - TN Rain

TN Rain Update: நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 5:51 PM IST

சென்னை: குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் இதனால் இந்த பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைப்பதிவு:திருப்பத்தூர் PTO 10 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. ஆற்காடு (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 9 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. செய்யார் (திருவண்ணாமலை) 8 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. ராணிப்பேட்டை, ஆரணி (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

வத்திராயிருப்பு (விருதுநகர்) 6 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 5 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒகேனக்கல் (தர்மபுரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), எடப்பாடி (சேலம்), இளையங்குடி (சிவகங்கை), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு)தலா 3 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

சென்னை விமான நிலையம், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), மயிலம்பட்டி (கரூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), ஏழுமலை (மதுரை), சாதியார் (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), நாங்குனேரி (திருநெல்வேலி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), VIT சென்னை AWS (சென்னை), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 2 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க:அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி; நீண்ட நாள்களுக்குப் பிறகு நீர்வரத்து அதிகரிப்பு.. உற்சாகத்தில் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details