தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் - இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்

உயர்கல்வி அனைத்து மாணவர் சேர்க்கை விகிதங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை
உயர்கல்வி மாணவர் சேர்க்கை

By

Published : Aug 26, 2021, 3:39 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஆக.26) நடைபெற்றது. அப்போது உயர்கல்வித் துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பு அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

அதில், “உயர்கல்வியில் அகில இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 27.1 என இருக்கும் நிலையில், மாநிலத்தின் ஒருங்கிணைந்த கல்வி கொள்கையால், தமிழ்நாடு 51.4 என்ற விகித அளவில் மாணவர் சேர்க்கையில் சிறப்பான இடத்தில் உள்ளது.

முதலிடம் பெற்று சாதித்த தமிழ்நாடு

தொடர்ந்து உயர்கல்வியில் அனைத்து மாணவர் சேர்க்கை விகிதங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அகில இந்திய அளவில் மாணவிகள் சேர்க்கை விகிதம் 27.3 என்ற நிலையில், தமிழ்நாட்டில் மாணவிகள் சேர்க்கை விகிதமானது 51 விழுக்காடாக உள்ளது.

பட்டியல் வகுப்பின மாணவ - மாணவியர்கள் சேர்க்கை முறையே 38.8, 40.4 விழுக்காடு என்ற விகிதத்தில் உள்ளது. பழங்குடியின மாணவ - மாணவிகள் சேர்க்கை முறையே 43.8, 37.7 விழுக்காடு என்ற விகிதத்தில் உள்ளது. இது அகில இந்திய சராசரி அளவைவிட, ஏறக்குறைய இரு மடங்கு அதிகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜெ. பல்கலை விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சி - அதிமுக வெளிநடப்பு

ABOUT THE AUTHOR

...view details