தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - etv bharat latest news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

tamilnadu-top-10-news-update
tamilnadu-top-10-news-update

By

Published : May 19, 2020, 1:15 PM IST

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருத்தணிகாசலம் பிணை மனு தள்ளுபடி!

சென்னை: திருத்தணிகாசலம் போன்றோரை பிணையில் விடுவித்தால் அவரை போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துவிடும் என அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியக் குழு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆலோசனை!

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், மத்தியக் குழு மண்டல இயக்குநர் டாக்டர் ரோஷினி தலைமையிலான குழுவினரைச் சந்தித்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.

பிகாரில் பேருந்து விபத்து; 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாட்னா: பாகல்பூரில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

யோகி ஆதித்யநாத்தின் மனிதாபிமானமற்ற அரசு - உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காட்டம்

லக்னோ: வெளிமாநில தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசு மனிதாபிமானமற்று செயல்படுகிறது என விமர்சித்துள்ளார்.

கரோனாவின் பொருளாதார தாக்கமும்; தொழிலாளர் நலச் சட்டங்களின் தளர்வும்!

கரோனா பெருந்தொற்றின் காரணமாக பெருவீழ்ச்சி அடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தையும் நலிவுற்று நசிந்திருக்கும் தொழில் துறையையும் மீட்டெடுக்க, தொழிலாளர் நலச் சட்டங்களில் பெருமளவு மாற்றங்களையும் தளர்வுகளையும் கொண்டுவர மாநில அரசுகள் முன்முயற்சி எடுத்து வருகின்றன.

ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் - ஜாமியா மாணவர்கள் கைது குறித்து சிதம்பரம்

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பண்டிகைக்கு வெளியாகும் சிவாவின் அடுத்த திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் பண்டிகை தினத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

‘இங்கிலாந்து தொடருக்கு எங்களை யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’ - ஜேசன் ஹோல்டர்!

தற்போதைய சூழலில் இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு எந்தவொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும் வற்புறுத்தப்படவில்லை என அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹொல்டர் தெரிவித்துள்ளார்.

இனி இருமினால் பிரச்னை இல்லை - புதிய மாத்திரை தயாரிப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

வாஷிங்டன்: கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய இருமல் மாத்திரையை அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details