தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் - ஓராண்டுப் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியீடு - graduate apprentice and technician diploma apprentice posts

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் நிரப்பப்படும் ஓராண்டுப் பயிற்சி பணிகளுக்கான, 660 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu-state-transport-corporation

By

Published : Sep 29, 2019, 11:06 AM IST

இதுகுறித்து அறிவிப்பில்,

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்படவுள்ள ஓராண்டுப் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பொறியியல் துறையில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பட்டயம், பட்டம் பெற்ற தமிழ்நாடு இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 660

; பயிற்சியின் பெயர்:Tamilnadu Govt Apprentices Training (Graduate,Diploma holders)

பயிற்சி காலம்: ஓர் ஆண்டு;

பயிற்சி இடம்: கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி, நாகர்கோவில்

பொறியியல் பட்டதாரி பயிற்சிக்கான காலிப்பணியிடங்கள்: 218

S.No Discipline கும்பகோணம் விழுப்புரம் நாகர்கோவில்
1 Mechanical Engineering 108 50 10
2 Automobile Engineering 20
3 Civil Engineering 09
4 Computer Science & Engineering 12
5 Electrical & Electronics Engineering 09

தகுதி:பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித் தொகையாக வழங்கப்படும்.

டெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சிக்கான காலிப்பணியிடங்கள்: 442

S.No Discipline கும்பகோணம் விழுப்புரம் நாகர்கோவில்
1 Mechanical Engineering 225 26 136
2 Civil Engineering 04 04
3 Computer Science & Engineering 07 10
4 Electrical & Electronics Engineering 03

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

உதவித்தொகை:பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11/10/2019;

இதையும் படிங்க:

1.4 லட்சம் பேருக்கு வேலை வழங்கவுள்ள அமேசான், பிளிப்கார்ட்

மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை!

ABOUT THE AUTHOR

...view details