இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ரம்ஜான் திருநாள். இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையின்படி முகமது, நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக ரமலான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருந்து இஸ்லாமியர்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுவர்.
தமிழ்நாட்டில் மே 25 ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு - Tamilnadu Ramzan
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரமலான் பண்டிகை, திங்கள்கிழமையன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ரம்ஜான்
30 நாள்கள் முடிவின் போது பிறை தெரியும் நாளைக் கணக்கிட்டு, ரம்ஜான் பண்டிகை தினத்தை அரசு தலைமை காஜி அறிவிப்பது வழக்கம்.
இந்நிலையில், 25ஆம் தேதியான திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அய்யூப் செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் இச்சூழலில் வீட்டில் இருந்தபடியே பண்டிகையைக் கொண்டாடும்படி தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.