தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் காவல்துறை சிறப்பாக செயல்படுவதாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இருவருக்கும் நேஷனல் ஆன்டி க்ரைம் & ஹுமன் ரைட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (தேசிய குற்ற எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்) தமிழ்நாடு தலைவர் சாம் பிரவீன் 'கரோனா வாரியர்ஸ்' என்ற விருதினை வழங்கினார்.
'தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது'- தேசிய மனித உரிமைகள் ஆணையம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம்
சென்னை: கரோனா பாதுகாப்பு பணிகளில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தேசிய குற்ற எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் தமிழ்நாடு தலைவர் சாம் பிரவீன் தெரிவித்துள்ளார்.
-national-human-rights-commission
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிற மாநிலத்தை ஒப்பிட்டு பார்க்கையில், நம்முடைய மாநிலத்தில் பொதுமக்களிடம் காவல்துறையினர் எந்த அடக்குமுறை, அடிதடி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்புப் பணி: காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு