கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் இந்துக்களாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் எல்லைத் தாண்டி பேசுகின்றனர்: திருநாவுக்கரசர் - ministers
சென்னை: மோடியுடன் ராஜவிசுவாசமாக இருப்பதைக் காட்டிக்கொள்வதற்காக அதிமுக அமைச்சர்கள் எல்லை மீறி பேசுவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
இந்த சூழலில், இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், "காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததை வைத்து கமல்ஹாசன் பேசியிருக்கலாம். அவர் சொன்ன வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கலாம். கோட்சே ஆர்எஸ்எஸ்-ல் இருந்தவர் தானே. அவர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஒரு அமைச்சர் நாக்கை வெட்டுவேன் என கூறியது என்ன வகையான வார்த்தைகள். இதற்காக கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரித்து வன்முறையை ஏவுவது சரியானது அல்ல" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கலாம். தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் பிறந்திருக்கலாம். ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது. இது தவறு. மோடியுடன் ராஜவிசுவாசமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள அதிமுக அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்" என தெரிவித்தார்.