தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலினை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத்தில் இன்று ஆயிரத்து 989 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை 40 ஆயிரத்து 698லிருந்து 42 ஆயிரத்து 687ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஆயிரத்து 484பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 ஆயிரத்து 938லிருந்து 30 ஆயிரத்து 444ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில், மாநிலத்தில் கரோனா தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் ஆயிரத்து 362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள்:
1 அரியலூர் - 392
2 செங்கல்பட்டு - 2,705
3 சென்னை - 30,444
4 கோவை - 173
5 கடலூர் - 533
6 தருமபுரி - 26
7 திண்டுக்கல் - 207
8 ஈரோடு - 72
9 கள்ளக்குறிச்சி - 330
10 காஞ்சிபுரம் - 672
11 கன்னியாகுமரி - 120
12 கரூர் - 93
13 கிருஷ்ணகிரி - 38
14 மதுரை - 409
15 நாகப்பட்டினம் - 106
16 நாமக்கல் - 92
17 நீலகிரி - 14
18 பெரம்பலூர் - 145