தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய அரசு ஆணை! - கரோனா தடுப்பூசி

தடுப்பூசிகள்
தடுப்பூசிகள்

By

Published : Apr 28, 2021, 10:41 AM IST

Updated : Apr 28, 2021, 12:20 PM IST

10:38 April 28

1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கொள்முதல் - தமிழ்நாடு அரசு ஆணை

1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய அரசு ஆணை!

இந்தியாவிலேயே அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.  

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை  (ஏப்ரல்.27), 55.51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.   

மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலமைச்சர் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Apr 28, 2021, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details