தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பாடல் ! - tamilnadu election commission

சென்னை: வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து பாடகி சித்ரா குரலில் மூன்று நிமிட விழிப்புணர்வு பாடலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

tamilnadu-election-commission-create-the-awareness-song-about-voter-verification-scheme

By

Published : Sep 24, 2019, 4:43 PM IST

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவிக்கையில், ’வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் பற்றி பாடகி சித்ரா பாடிய மூன்று நிமிட பாடலை உருவாக்கியுள்ளோம்.

தேர்தல் ஆணையர் சத்தியப் பிரதா சாகு

இதனை அரசு கேபிள் டிவி, தொலைக்காட்சி, பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்பி மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

இடைத்தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனை நாளை காணொலி காட்சி மூலம் நடக்கவிருக்கிறது. மற்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தேர்தல் நடக்கவுள்ள பகுதிகளில் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details