தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 682 பேருக்கு கரோனா - tamilnadu corona update

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜன.11) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682ஆக உள்ளது.

tamilnadu-corona-update
tamilnadu-corona-update

By

Published : Jan 11, 2021, 9:21 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 11ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் மதுரையில் புதிதாக ஒரு ஆய்வகத்திற்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 249ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 60 ஆயிரத்து 24 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 680 நபர்கள், பிகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இருவர் என 682 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 78 ஆயிரத்து 202 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 943 நபர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை கண்டறிய முடிந்தது.

தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 6,971 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 869 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 744 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் நான்கு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் என மேலும் ஆறு பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 228 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை மாவட்டம் - 2,27,975

கோயம்புத்தூர் மாவட்டம் - 53,200

செங்கல்பட்டு மாவட்டம் - 50,609

திருவள்ளூர் மாவட்டம் - 43060

சேலம் மாவட்டம் - 32004

காஞ்சிபுரம் மாவட்டம் - 28970

கடலூர் மாவட்டம் - 24,805

மதுரை மாவட்டம் - 20736

வேலூர் மாவட்டம் - 20449

திருவண்ணாமலை மாவட்டம் - 19254

தேனி மாவட்டம் - 16972

தஞ்சாவூர் மாவட்டம் - 17393

திருப்பூர் மாவட்டம் - 17408

விருதுநகர் மாவட்டம் - 16459

கன்னியாகுமரி மாவட்டம் - 16578

தூத்துக்குடி மாவட்டம் - 16173

ராணிப்பேட்டை மாவட்டம் - 16013

திருநெல்வேலி மாவட்டம் - 15416

விழுப்புரம் மாவட்டம் - 15080

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 14403

ஈரோடு மாவட்டம் - 13993

புதுக்கோட்டை மாவட்டம் - 11472

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10837

திருவாரூர் மாவட்டம் - 11037

நாமக்கல் மாவட்டம் - 11390

திண்டுக்கல் மாவட்டம் - 11,071

தென்காசி மாவட்டம் - 8325

நாகப்பட்டினம் மாவட்டம் - 8287

நீலகிரி மாவட்டம் - 8057

கிருஷ்ணகிரி மாவட்டம் - 7958

திருப்பத்தூர் மாவட்டம் - 7512

சிவகங்கை மாவட்டம் - 6582

ராமநாதபுரம் மாவட்டம் - 6359

தருமபுரி மாவட்டம் - 6506

கரூர் மாவட்டம் - 5291

அரியலூர் மாவட்டம் - 4657

பெரம்பலூர் மாவட்டம் - 2259

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 936

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1029

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details