தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 467 பேருக்கு கரோனா தொற்று உறுதி - corona count

சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக 467 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 467 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் மேலும் 467 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Feb 25, 2021, 11:06 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரத்து 583 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 466 நபர்களுக்கும், இங்கிலாந்திலிருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும் என 467 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 70 லட்சத்து 7 ஆயிரத்து 966 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 8 லட்சத்து 50 ஆயிரத்து 96 நபர்கள் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 53 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 471 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 560 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரும் அரசு மருத்துமனையில் மூன்று நோயாளிகள் என மேலும் ஐந்து பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12, 483 உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை மாட்டம் 2,35,005

கோயம்புத்தூர் மாவட்டம்- 55, 630

செங்கல்பட்டு மாவட்டம்- 52, 618

திருவள்ளூர் மாவட்டம் - 44, 142

சேலம் மாவட்டம் - 32, 709

காஞ்சிபுரம் மாவட்டம் -29,502

கடலூர் மாவட்டம்- 25,141

மதுரை மாவட்டம் - 21,220

வேலூர் மாவட்டம் - 20, 962

திருவண்ணாமலை மாவட்டம் - 19, 473

திருப்பூர் மாவட்டம்- 18, 303

தஞ்சாவூர் மாவட்டம்- 18,047

தேனி மாவட்டம் - 17, 152

கன்னியாகுமரி மாவட்டம்- 17, 069

விருதுநகர் மாவட்டம் -16, 654

தூத்துக்குடி மாவட்டம் - 16, 349

ராணிப்பேட்டை மாவட்டம் -16,220

திருநெல்வேலி மாவட்டம் -15, 723

விழுப்புரம் மாவட்டம் -15, 256

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14, 949

ஈரோடு மாவட்டம் - 14,769

புதுக்கோட்டை மாவட்டம் - 11, 646

நாமக்கல் மாவட்டம் - 11, 795

திண்டுக்கல் மாவட்டம் -11, 448

திருவாரூர் மாவட்டம் - 11, 339

கள்ளக்குறிச்சி மாவட்டம்- 10, 905

தென்காசி மாவட்டம் - 8, 532

நாகப்பட்டினம் மாவட்டம்- 8, 587

நீலகிரி மாவட்டம் - 8, 340

கிருஷ்ணகிரி மாவட்டம் - 8, 155

திருப்பத்தூர் மாவட்டம்- 7,631

சிவகங்கை மாவட்டம் - 6, 774

ராமநாதபுரம் மாவட்டம் - 6, 467

தருமபுரி மாவட்டம்- 6,651

கரூர் மாவட்டம் -5,497

அரியலூர் மாவட்டம் -4, 734

பெரம்பலூர் மாவட்டம்- 2,283

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 948

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1,043


ரயில் மூலம் வந்தவர்கள்- 428

ABOUT THE AUTHOR

...view details