தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறை அவரச அழைப்பு எண்கள் தற்காலிகமாக மாற்றம்! - Police emergency numbers change in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் அவசர தேவைக்காக அழைக்கும் காவல்துறையின் எண்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவரச அழைப்பு எண்கள் மாற்றம்
அவரச அழைப்பு எண்கள் மாற்றம்

By

Published : May 22, 2020, 8:25 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவசர தேவைக்காக காவல்துறையை தொடர்புகொள்ள 100 மற்றும் 112 ஆகிய எண்களை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பொதுமக்கள் 100 மற்றும் 112 எண்களை அவசர தேவைக்காக அழைக்கும்போது காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைப்பை பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால், தற்போது பொதுமக்கள் அவசர தேவைக்காக காவல் துறையினரை தொடர்புகொள்ள தற்காலிகமாக 044 -71200100,044 - 46100100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு காவல் துறை அறிவித்து உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details