இங்கிலாந்தில் இருந்து வேகமாக பரவும் புதிய வகை கரோனா தொற்றை, தமிழ்நாட்டில் பரவாமல் எவ்வாறு தடுப்பது மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பது குறித்து வருகிற 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இங்கிலாந்தில் புதிய வகை கரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த சூழலில் நேற்று இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
புதிய வகை கரோனா: மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: டிசம்பர் 28ஆம் தேதி புதிய வகை கரோனா தொற்று குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
Tamilnadu cm meeting with medical team about new corona virus
தற்போது உருவாகியுள்ள கரோனா தொற்றையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டு, தொற்று பரவாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.