தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம் - tamilnadu cabinet meeting started in secretariat

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

tamilnadu cabinet meeting started in secretariat
tamilnadu cabinet meeting started in secretariat

By

Published : May 2, 2020, 11:10 AM IST

ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகளில் சில குறிப்பிட்ட தளர்வுகளையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் , துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மே மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் ஊரடங்கில் எந்தெந்த பணிகள் செய்ய அனுமதி வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details