கரோனா தொற்று தடுப்பு குறித்தும், தமிழ்நாட்டில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
மே 3ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க முதலமைச்சரால் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வல்லுநர்கள், மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை நேற்று சமர்பித்தது.