சென்னை:தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை திமுக செய்ய வேண்டும் என்று தான் இந்த போராட்டம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பாஜக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
திமுக, முதலமைச்சர் ஸ்டாலினின் முதல் எதிரி ஆர்.எஸ்.பாரதி தான். திமுக தேர்தல் அறிக்கை தயாரித்தவரிடம் தான் பெட்ரோல் விலையைக் குறைக்க கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி விஞ்ஞான பூர்வமாக நினைத்து பேசுகிறார். மக்கள் பணி செய்ய வேண்டிய அமைச்சர்கள் இப்போது ஊர் ஊராக சென்று உதயநிதியை அமைச்சராக்க திட்டம் போடுகிறார்கள்.
கட்சத்தீவை திமுகவால் மீட்க முடியாது:பாஜக கோட்டையை நோக்கி வரப்போகிறோம் என்று தெரிந்து முதலமைச்சர் டெல்டாவிற்கு சென்று விட்டார். முதலமைச்சர் எங்கு சென்றாலும் விட மாட்டோம். இன்னும் நான்கு நாட்களில் இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பாஜக வெளியிடும்.