தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 6, 2020, 7:28 AM IST

ETV Bharat / state

சரவணா ஸ்டோர்ஸில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் தொழில் செய்ய தடை

சென்னை: சரவணா ஸ்டோர் நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞரைத் தொழில் செய்ய தடைவிதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tamilnadu bar council  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில்  வழக்கறிஞருக்கு தடை  சரவண ஸ்டோர் நகைக்கடையில் பணம் கேட்டு மிரட்டியவர்
tamilnadu pudhucherry bar council

கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.வி. சதிஷ் என்பவர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையில் விற்கக்கூடிய நகை போலியானது எனக்கூறி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக அக்கடையின் சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை ஏற்று காவல் துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதன் காரணமாக வழக்கறிஞர் சதிஷ், அனைத்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவர் மீதான அந்த வழக்கின் விசாரணை முடியும் வரையில் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர் தொழில் செய்ய தடைவிதித்துள்ளது.

இதையும் படிங்க: மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details