தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் -வானிலை மையம்

சென்னை: தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இயல்பை விட இரண்டு டிகிரி வெப்பம் அதிகரிக்கும்  என்றும், நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு உள் தமிழ்நாட்டில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை

By

Published : Mar 21, 2019, 1:54 PM IST

தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழ்நாடு கடலோர மாவட்டத்தில் இன்று இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும்- வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details