சென்னை:ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 46ஆவது புத்தக கண்காட்சிக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்து புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “46ஆவது புத்தகக் கண்காட்சியில் பல்வேறு இடங்களில் இருந்து புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளனர். நான் மிக நீண்ட நேரமாக புத்தகம் படிக்கும் பழங்கம் உள்ளவர். இரவில் புத்தகம் படிக்காமல் எனது விடியல் விடியாது. இத்தனை நாள் புத்தகங்களை படிப்பதால் தான் நான் அனைத்து சவால்களையும் மேற்கொண்டு வருகிறேன்.
ஆகவே, இளைஞர்கள் படிக்க வேண்டும், புத்தகங்கள் படிப்பது மிகப்பெரிய பலத்தை தரும், ஒரு தேனி தேனை சேர்ப்பதற்கு போல அனைத்து புத்தகங்களின் இங்கு சேர்த்து இருக்கின்றனர். எனவே இளைஞர்கள் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். வீடு வாங்கும் போது நூலகத்திற்கு ஒரு அறையை அமைக்க வேண்டும்.