ஃபோனி புயலால் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர், கட்டாக், புரி மாவட்டங்கள் உருக்குலைந்து போயுள்ளன. மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கமலுக்கு பார்வைக் கோளாறு? 'டாக்டர்' தமிழிசை சாடல் - cyclone fani
டார்ச் லைட்டை சின்னமாக வைத்திருந்தும் கமலுக்கு பார்வைக் கோளாறு உள்ளதா என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சந்தேகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஃபோனி புயலால் ஒடிசா பாதிக்கப்பட்டபோது சிறப்பாக செயல்பட்ட ஒடிசா முதலமைச்சரை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். ஆனால், புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தையோ, நிவாரணம் அறிவித்த பிரதமரையோ அவர் பாராட்டவில்லை.
இதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த தமிழிசை, 'புயல் வரும் பாதையை துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை விடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தையோ, உயிரை பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் வீரர்களையோ, புயல் வரும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த பாரதப் பிரதமரை பாராட்ட மனம் இல்லாமல் வாய் மூடி மவுனியாக இருக்கும் கமல், ஒடிசா முதலமைச்சரை மட்டும் பாராட்டுவது பாரபட்சமானது. இதில் கூட பிரதமர் மோடி மீது வெறுப்பைக் காட்டுவது அவரது முதிர்ச்சியற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது. டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறு' என விமர்சித்திருந்தார்.