தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேச தந்தையை தீவிரவாதி என கூறுவதா...? - தமிழிசை கண்டனம் - தீவிரவாதி

சென்னை: மகாத்மா காந்தியை தீவிரவாதி எனக் கூறும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

By

Published : May 20, 2019, 9:10 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருமாவளவனின் சுயரூபமும், மன நிலையும் வெளிப்பட்டுவிட்டது. சனாதன தர்ம எதிர்ப்பு என்று பரப்புரை செய்துவருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். அவர் நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார். இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு முழு காரணம் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று ஆவேசப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மறந்து காங்கிரசோடு கூட்டணி அமைத்து ராகுலை பிரதமர் ஆக்குவதே என் முதல் வேலை என்கிறார்.

தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கிவந்தார். ஆக, இவர்களின் கொள்கை என்பது அவர்களின் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். ஆனால், அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. முழுக்க முழுக்க தனது ஆதாயத்துக்காக சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார். இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார். இதற்கு மற்ற கட்சிகள் என்ன சொல்லப் போகின்றன?

மன்னார்குடி ஜீயரின் கருத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் மகாத்மா காந்தியடிகளை தீவிரவாதி எனக்கூறியதை கண்டிக்க தவறியது ஏன்? கூட்டணி பாசமா? காந்தி உண்மையான இந்து. அவர் வணங்கும் கடவுளை ‘ஹேராம்’என்று சொன்னது தப்பா? எல்லோரும் அவரவர் மதங்களில் உண்மையாக இருங்கள் என்றுதான் காந்தி சொன்னார். அவரையும் திருமாவளவன் தீவிரவாதி ஆக்கி இருக்கிறார்”. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details