தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஊழல் இல்லாத ஆட்சி நிறைவடைய போகிறது என்பதற்காகவும் அதே ஆட்சி தொடறபோகிறதே என்கிற ஒரு ஆதங்கத்திலும் ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளனர். ரஃபேல் தொடர்பாக எந்த தவறும் நடக்கவில்லை என்று தமிழிசை கூறினார்.
ராணுவ அமைச்சர் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர். ஆக எந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்த முடியாத ஒரு காரணத்தினால் ரஃபேல் விவகாரத்தை இவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதில் எந்த ஒரு ஊழலும் நடக்கவில்லை என தமிழிசை தெரிவித்தார். மோடி தெளிவாக ஒன்று கூறியிருக்கிறார், ஊழல் செய்பவர்களையும் விடமாட்டோம் நாங்களும் ஊழல் செய்யமாட்டோம் என்றார். உண்மை எப்போதும் வெளியே வரும் அது பாஜகவுக்கு சாதகமாகதான் வரும் என்பதுதான் எனது கருத்து.
மம்தாவிடம் இருந்து மோடிக்கு சர்டிபிகேட் தேவையில்லை, மக்களிடமிருந்துதான் சர்டிபிகேட் தேவை. கேஎஸ் அழகிரி ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கட்சித் தலைவர் ஆனதிலிருந்து நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காங்கிரஸை விட பாஜகவின் மீதுதான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் காங்கிரஸ் வேலையை அழகிரி பார்த்தால் அவருக்கு நன்றாக இருக்கும் என்றார். காங்கிரஸ், திராவிடக் கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.