சென்னை: குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அதிகனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக, தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேபோல் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி(Pro Kabaddi) தொடரின் தமிழ் தலைவாஸ் அணியின் வீரரும் தூத்துக்குடியை சேர்ந்தவருமான மாசானமுத்துவின் வீடும் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தாலும், அவர்கள் தங்களது வீட்டை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கபடி வீரர் மாசானமுத்து, இப்படியான சூழலில், அங்கு இருந்து தன் பெற்றோருக்கு உதவ முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அவர் பேசுகையில், "மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் இடிந்துவிட்டன. அதில் எங்கள் வீடு மட்டும் அதன் அருகில் இருந்த உறவினர்களின் வீடுகளும் இடிந்ததால் அதனால் அவர்கள் ஒரு பள்ளியில் உள்ள முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.