முன்னதாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நாளடைவில் கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தும கலாச்சாரம் வந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை ராயபுரம் குடியிருப்பில் குடும்ப பிரச்னை காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம், யானைகவுனியில் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், கள்ளக்குறிச்சியில் ஒருவர் கொலை, பழனியில் ஒருவர் பலத்த காயம் என தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியது.
மேற்கூறிய அனைத்து சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், மேற்குவங்காளத்தில் இருந்து கள்ளச்சந்தையில் வாங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்த போதிலும் துப்பாக்கி கலாச்சாரம் ஓய்ந்தபாடில்லை என்றே கூறலாம்.
கள்ளத்துப்பாக்கி விவகாரம்
இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (DGP) சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் டிஸ்ஹார்ம் (OPERATION DISARM) என்ற பெயரில் ரவுடிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஏழு கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் சென்னை கீழ்பாக்கததில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தொழிலதிபரை கடத்திச் சென்று 25 லட்சம் பணம் பறித்த சம்பவமும், கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியரான துளசி தாஸ் மற்றும் சோமு ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு பணத்தை பறித்துச் சென்ற சம்பவமும், இந்திராணி என்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி ஐந்து சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.
துப்பாக்கியைக் காட்டி நகை பறித்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தசாவை என்கவுண்டர் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரான நஹீம் அக்தரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கி யாரிடம் இருந்து வாங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி உரிமம்
கள்ளத்துப்பாக்கி வாங்கப்படுவது எப்படி என காவல்துறை உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “ரவுடிகள், தொழிலதிபர் உட்பட பலர் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கொடுத்து கள்ளத் துப்பாக்கியை வாங்கி, சர்வசாதாரணமாக அதை பாகங்களாக பிரித்து ரயில் மூலமாக பைகளில் போட்டு கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி உரிமம் அளிப்பதற்கான அதிகாரம் சென்னையை பொறுத்தவரையில் காவல் ஆணையருக்கும், மற்ற மாவட்டங்களில் கலெக்டருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபருக்கு பாதுகாப்பு தேவைக்காக துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அடையாள சான்று, வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், தொழில்ரீதியான விவரங்கள், வங்கி பரிவர்த்தனைகள், வருமானவரி செலுத்திய ஆவணங்கள், சொத்து விவரங்கள், மனநல சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த காவல்துறை முதல் தகவல் அறிக்கை நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும்.
உரிமம் பெருவது எப்படி?