சென்னை :சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது எனவும், அன்றைய தினம் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான செலிவனங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் அறிமுகம் செய்வார் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அப்பாவு, “நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்கல் செய்த மகளிருக்கான இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்பதையும், அதை சட்டமாக நிறைவேற்ற முடியுமா என்பதையும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதிலும் தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில், தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கி அனைத்து மகளிரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதையே நாமும் மகளிருக்கு இடஒதுக்கீடு என்று ஒரு மூலம் வாக்குகளை பெற்றுவிடாலம் என்பதற்காக மத்திய அரசு அறிவித்திருக்கலாம் என பலர் பேசி வருகின்றனர். நான் கூறவில்லை.
இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது என மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஏனெனில், மக்கள் கணக்கெடுப்பு இதுவரை எடுக்கவில்லை. இது போல பல பிரச்னைகள் உள்ளது. இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இதை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்கட்சித் துணைத் தலைவர் விவாகரம் தொடர்பாக ஏற்கனவே அவர்கள் தரப்பில் முடிவு செய்யபட்டுள்ளது. மேலும், சட்டபேரவை நிகழ்வுகள் எத்தனை நாட்கள் என அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும். நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தொடர் துவங்கும்போது குடியரசுத் தலைவர் முன்னிலையில் துவங்கியிருக்க வேண்டும்.