சென்னை:கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவப் பிரிவு துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் ஆளுநர் ரவி பேசியது, “புதிய கண்டுபிடிப்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளை புரிந்து கொண்டு அதனை ஏற்றுகொள்ள வேண்டும் எனக் கூறிய அவர் தமிழ்நாடு மருத்துவ துறையில் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளது.
இதுபோன்ற புதிய துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக அமைய வேண்டும், மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழகம் முன்னோக்கி இருக்கிறதோ அதே போல IOT (Internet of Things) துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும்” என்று கூறினார்.