சென்னை:கோட்டூர்புரத்தில் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் அமைந்துள்ள கோளரங்கத்தில் சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சியை காண்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரை கண்டு ரசித்தனர்.
சரியாக இன்று (ஆகஸ்ட் 23) மாலை 06:04 மணிக்கு லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் போது அந்த மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடினர்.சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிப் பயணத்தின் மூலம் நிலவை அடைந்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்து உள்ளது. அதே நேரம், முன்னதாக அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவில் தரை இறங்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக ரஷ்யா அனுப்பியா லூனா விண்கலம் தொழிநுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்தது. இந்நிலையில், நிலவில் ஆராயப்படாத தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் லெனின் தமிழ் கோவன் பேசுகையில், "குழந்தையை தாய் பெற்றெடுத்ததைப் போல பெருமையாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் என சொல்லக்கூடிய நாடுகள் மத்தியில் இந்தியா சாதித்து காண்பித்துள்ளது.
இது இந்தியாவிற்கான வெற்றி மட்டுமல்ல, உலக நாடுகளின் வெற்றி.
இதையும் படிங்க:Chandrayaan-3 : நிலவில் தடம் பதிக்கும் முன் நாமக்கல் மண்ணில் தடம் பதித்த சந்திராயன்-3