முதல்முறையாக பெட்ரோலைவிட டீசல் விலை அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.100ஐ எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வணிக லாரிகள் உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விகிதத்திற்குள் பெட்ரோல், டீசல் விற்பனையை கொண்டுவர மத்திய அரசு மறுத்துவருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் அதன்படி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சென்னையில் லாரிகள் இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள், செலவினங்கள், டீசல் விலை ஏற்றத்தால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்டவையை குறிப்பிட்டு அதனுடன் டீசல் விற்பனையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மறுக்கும் மத்திய பெட்ரோலிய அமைச்சரை கண்டிக்கும் வகையில் அல்வா செய்து அவருக்கு கொரியரில் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடி: டீசல் விலை உயர்வை கண்டித்து லாரிகள் நாளை வேலை நிறுத்தம்!