அரிசி:
- நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட (White Colour Bag) அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.
- ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி விதியோகம் செய்தல் கூடாது
- பொங்கல் பண்டிகைக்காக புதிய சன்னரக அரிசி Super fine நகர்வு செய்யப்பட்ட அரிசி மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு வழங்க வேண்டும்.
- அனைத்து அரிசி மூட்டைகளையும் குத்தூசி மூலம் அரசியின் தரத்தினை இன்றே சரிபார்க்க வேண்டும். பொருட்கள் விநியோகத்தின் போது குறை காணப்பட்டால் மாற்று அரிசி வழங்கிட இயலாத நிலை ஏற்படும் தரமான அரிசி வழங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும்.
- 100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது.
- அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் புதிய பச்சரிசி வழங்கப்பட்டுள்ளதால் இதில் வண்டு, செல் பூச்சி எளிதில் பிற மூட்டைகளில் இருந்து இதற்கு பரவி விட வாய்ப்புள்ளது. இதனை தனியே பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
- அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் புதிய பச்சரிசி வழங்கப்பட்டுள்ளதால் இதில் வண்டு, செல் பூச்சி எளிதில் பிற மூட்டைகளில் இருந்து இதற்கு பரவி விட வாய்ப்புள்ளது. இதனை தனியே பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
- பச்சரிசியில் பூச்சி எளிதில் உற்பத்தி ஆகிவிடும் என்பதால் இதனில் கவனம் தேவை என்பதை விற்பனையாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
- அதிக பூச்சி / வண்டுகள் காணப்படும் பச்சரிசியினை உடன் மாற்றம் செய்து தரமான அரிசி விதியோகம் செய்வதை உறுதி செயது கொள்ள வேண்டும்.
சர்க்கரை:
- சர்க்கரை விநியோகம் தொடர்பில் இதற்கென தனியே பெறப்பட்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க வேண்டும்.
- தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை 100% அனைத்து கடைகளுக்கும் நகர்வு செய்யப் பட்டுள்ளது. இதனை மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பயன்படுத்திட வேண்டும்.
- சர்க்கரையின் தரமும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பழுப்பு நிற சர்க்கரை, மாவு போன்ற சர்க்கரை போன்றவற்றை விநியோகம் செய்தல் கூடாது.
கரும்பு:
- நியாய விலைக் கடைகளுக்கு 100 % கரும்பு நகர்வு செய்திட வேண்டும். எண்ணிக்கையில் குறைவு இருக்க கூடாது. அதிகமாக இருக்கலாம் ஆனால் குறைவு கண்டிப்பாக இருக்க கூடாது.
- கரும்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது.
- 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே பொது மக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும்.
- எக்காரணத்தைக் கொண்டும் 6 அடிக்கு குறைவான கரும்புகளை விநோயகம் செய்யக் கூடாது. அதனை தனியே பிரித்து வைத்து விட வேண்டும். இதனை விநியோகம் செய்யக் கூடாது. மேலும், இது பொது மக்களின் பார்வைக்குபடும்படி வைத்து தேவையில்லா பிரச்சனைகளுக்கு வழிவகுக்ககூடாது.
- நோயுள்ள, செல்லரித்த பிடித்த கோந்தாளை கரும்புகள் விநியோகம் செய்யக் கூடாது.
- கரும்பு சோகையுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மொத்த உயரம் 10 அடி அல்லது அதற்கு மேல் இருக்க கூடும். மின் கம்பங்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். current shock விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
- இது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தெளிவாக எடுத்து கூற வேண்டும். எவ்வித அசம்பாவிதங்களும், விபத்துகளும் ஏற்பட கூடாது
- ஒரு வாரம் வரையிலும் கரும்பு இருப்பில் உள்ள நிலை உள்ளதால் கரும்பு சோகைகள் காய்ந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை ஈர சாக்கு போர்த்தி தினமும் தண்ணீர் தெளித்து பாதுகாப்பு செய்திட வேண்டும்.
- நியாய விலைக் கடைகளிலுள்ள கரும்புகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பொது வெளியில் உள்ள கரும்புகள் களவு போகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.