சென்னை:தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஏ.பி.வெங்கடாசலம் பதவி வகித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
பணிக்காலம் முடிவடையும் நிலையில் அவரது வீடு உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை சான்று வழங்கிய முறைகேடு
மாசு கட்டுப்பாட்டு வாரிய தடையில்லா சான்று வழங்கிய முறைகேட்டில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போதுவரை சோதனையில் ரூ.15 லட்சம் பணமும் தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குநராகவும், வனத்துறையில் தலைமை வன பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினராகவும், கடலோர பாதுகாப்பு குழும உறுப்பினராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பள்ளிகள் திறப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்