தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் சண்முகம், தமிழ்நாடு முதலமைச்சரின் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜே.கே திரிபாதி ஆகியோர் இன்று மாலை விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்வதாகத் தெரிகிறது.
திடீரென டெல்லி விரையும் தமிழ்நாடு அலுவலர்கள்! - தமிழ்நாடு உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர்
சென்னை: தமிழ்நாடு அரசின் உயா் அலுவலர்கள் சிலர் இன்று மாலை டெல்லி செல்வதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu officials rushing to Delhi suddenly
இதில், தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலர் பிரபாகா், தமிழ்நாடு முதலமைச்சரின் செயலர் P.செந்தில்குமாா்,தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி ஆகியோா் இன்று மாலை 5.05 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலமும், தமிழ்நாடு அரசு தலைமை செயலர் சண்முகம் இன்று இரவு 7 மணி இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலமும் டெல்லி செல்வதாகத் தெரிகிறது.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு உயா் அலுவலர்கள் திடீரென டெல்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.