இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில (பொறுப்பு) தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு குற்றமா என்கிற கேள்வி ஒரு பக்கமிருக்க, அந்தச் சேனலின் 500 வீடியோக்களைக் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே காவல் துறையினர் அழித்துள்ளனர்.
கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம்
சென்னை: கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் பதிவுசெய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
karuppar koottam surender
மேலும், கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் போட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான கண்டனத்திற்குரிய செயலாகும். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தக் குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சுரேந்தர், கோபால் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!