தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 4,519 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,519 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 90,137 என குறைந்துள்ளது.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

By

Published : Feb 8, 2022, 9:06 PM IST

சென்னை:தமிழ்நாட்டில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (பிப்.8) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 152 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 4 ஆயிரத்து 516 நபர்களுக்கும், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் என 4,519 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக 4,519 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 16 லட்சத்து 23 ஆயிரத்து 839 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 34 லட்சத்து 20 ஆயிரத்து 505 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில், தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிப்படுத்தும் மையங்களில் 90 ஆயிரத்து 137 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 20 ஆயிரத்து 237 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 92 ஆயிரத்து 559 என அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை

தனியார் மருத்துவமனைகளில் 19 நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளில் 18 நோயாளிகளும் என 37 நபர்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 809 என உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 792 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 778 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 398 நபர்களுக்கும், சேலத்தில் 251 நபர்களுக்கும், திருப்பூரில் 276 நபர்களுக்கும் என கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை

கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை மாநில அளவில் 4.3 விழுக்காடு என குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 10.2 விழுக்காடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8.8 விழுக்காடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 8.6 விழுக்காடு என்ற அளவில் நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.

சென்னையில் ஐந்து விழுக்காடு குறைந்து 4.9 விழுக்காடு என்ற அளவில் நோய்த்தொற்றுப் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் மதிப்பெண்ணில் தவறு ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே பொறுப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details