தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தாக்கம் காரணமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறாமல் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சட்டப்பேரவை நிகழ்வுகளைக் காண பொதுமக்கள் , பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. மேலும் பார்வையாளர்களும் நேரில் காண அனுமதி வழங்கப்பட்டது.