தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடத்தல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

சென்னை: ரேஷன் பொருள்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  தண்டனைகளும் அபராதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடத்தல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ்  தெரிவித்துள்ளார்.

காமராஜ்
காமராஜ்

By

Published : Jul 28, 2020, 4:52 PM IST

சென்னை கோடம்பாக்கம் மண்டலம் பாண்டி பஜார் பகுதியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டு, முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சியில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் 100 விழுக்காடுகள் செம்மையாக நடைபெற்றுவருகிறது.

இதன் மூலம் கரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 81 நாள்களில் 24ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று 14லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருள்கள் கடைகளில் பணியாற்ற கூடிய பணியாளர்களுக்கும் 14நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைக்காக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில், 71ஆயிரம் குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே அட்டை என்ற திட்டம் செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை நடைமுறைபடுத்தப்படும்.

மாநிலத்தில் அரசி கடத்தல் போன்றவை அதிகமாக இருந்தது. இதனை தடுக்க கடுமையான தண்டனைகள், அபராதங்கள் விதிக்கப்பட்டு, தற்பொழுது வெகுவாக குறைக்கப்பட்டு, கடத்தல் என்பதே தமிழ்நாட்டில் இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details