சென்னை:தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை த சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு - தமிழ்நாடு சட்டப்பேரவை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Etv Bharat
இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய உதவி ஆணையர் திருமலை, காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து தற்போது 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 5 லட்சம் ரூபாய் கூடுதல் நிவாரணம்