சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ளது.