வாரிசு மற்றும் துணிவு படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி வெளியாகவுள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு பெருநகர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி இல்லை.
ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. தியேட்டர்கள் முன்பு பெரிய அளவிலான கட்அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் வைத்து பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
சினிமா டிக்கெட்டுகளின் பின் பக்கத்தில் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக, சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்பு எண், பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். தியேட்டர்களில் பார்க்கிங் டிக்கெட், சினிமா டிக்கெட் தொடர்பாக புகார்கள் வந்தால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.