தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு மறுநாள்(நவ.13) விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவித்த தீபாவளி பரிசு! - holiday for diwali in tamil nadu 2023

TN Govt public holiday diwali: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் வைத்த கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் நவ.13ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

tn govt announcement next day of Diwali is public holiday on november 13th
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 6:23 PM IST

Updated : Nov 6, 2023, 9:23 PM IST

சென்னை:தீபாவளிக்கு மறுநாள் நவ.13ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு இன்று (நவ.6) அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பிலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்றும் அதாவது, தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (நவ.6) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசு அறிவிப்பு இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணிநாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது' என அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:பட்டாசு கடையா..? மிட்டாய் கடையா..? தீபாவளிக்கு புதிதாய் களமிறங்கி உள்ள பட்டாசு வடிவ மிட்டாய்கள்!

Last Updated : Nov 6, 2023, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details