சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திடீரென்று அவர் மனைவியுடன் டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவர் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்று இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், தமிழ்நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாநில நிலவரம் தொடர்பாக மாதம்தோறும் ஆளுநர் தரப்பில் அளிக்க வேண்டிய அறிக்கைகளையும் இந்தப்பயணத்தின் போது சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.