சென்னை: தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பாடத் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சிகளை அறிவியல் கல்லூரிகளில் 75% அமல்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை வலியுறுத்தியது. இதற்கு தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கல்வியாளர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாடத்திட்டம் தர்மத்தில் இருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், 'தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டியதில்லை' என ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் தன்னாட்சி கல்லூரிகளுக்கு இன்று (ஆக.21) கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்ட முறை குறித்து ஆக.9ஆம் தேதி தமிழக ஆளுநர் பல்கலைக்கழக மானிய குழுவிற்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் யுஜிசி-யின் விதிகளை யுஜிசி தலைவர் பட்டியலிட்டுள்ளார். யுஜிசி கடிதத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது. யுஜிசி விதிகள் நாட்டில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான பாடத்திட்டத்தை தாங்களே வடிவமைத்து கொள்ளலாம் என்ற விதி இருக்கின்றபோது அதற்கு மாற்றாக பொதுப் பட்டியலில் தமிழக உயர்கல்வி மன்றம் வடிவமைத்துள்ள 'பொது பாடத்திட்டம்' முறையை ஏற்கத் தேவை இல்லை என்றும் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், இதில் மாநில அரசு தன்னிச்சையாக யுஜிசி விதிகளுக்கு மாறாக பொது பாடத்திட்ட முறையை கொண்டுவர முடியாது. பொது பாடத்திட்ட முறையால் பல்வேறு பாதிப்புகள் உள்ளாகும் என தமிழகத்தில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளின் நிர்வாகங்கள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் பொது பாடத்திட்ட முறை குறித்து தனது கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து பொதுப் பாடத்திட்ட முறையை பின்பற்ற தேவையில்லை.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி மாணவர்களுக்கான பாடத்திட்டம் கற்பிக்கும் முறை தேர்வு முறை கற்பித்தல் வழிமுறைகள் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கிரெடிட் முறையில் மதிப்பெண்கள் வழங்கும் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் மானியக் குழு தமிழ்நாடு ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்கு பொது பாடத் திட்டத்தினை தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் மூலம் உருவாக்கி நடப்பாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பொது பாட திட்டத்தை உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பாடத்திட்ட கருத்துக்கள் வகுக்கப்பட்டன.