தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.ஏ.ஏ.விற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கவுதமன் - Gowthaman

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

gowthaman
gowthaman

By

Published : Mar 5, 2020, 11:11 AM IST

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் கவுதமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக அரசு தமிழ் இனத்தின் மீது அத்துமீறலை நடத்திக்கொண்டிருக்கிறது. வண்ணாரபேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மதிப்பளித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பிற மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கவுதமன், தமிழ் பேரரசு கட்சித் தலைவர்

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து ஒரு எதிர்பாராத விபத்தாகும். அந்த விபத்தை காரணம்காட்டி கமல்ஹாசனை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் நடத்தியவிதம் கண்டனத்துக்குரியது. கலைஞர்களை, கலைஞர்களாகப் பார்க்க வேண்டும். படிப்பிடிப்புத் தளங்களில் அரசு பாதுகாப்புத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இந்தியன் 2' விபத்து விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு முன்னிலையான பின் கமல் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details