தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 161 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) – 74
Assistant Section Officer in Secretariat (Finance Department) – 29
Assistant in Secretariat (Other than Law and Finance Department) – 49
Assistant in Secretariat (Finance Department) – 09
சம்பளம்:Assistant Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 16 படி, ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை மாத சம்பளமாக பெறுவார்கள். Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 9 படி, ரூ.20,000 முதல் ரூ.73,700 வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
கல்வி தகுதி:இந்த அரசு பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce, Economics, Statistics போன்ற பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அனுபவம்:இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் Assistant அல்லது Junior Assistant பதவிகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
வயது வரம்பு:01.07.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது, Assistant Section Officer பணிக்கு 35 வயது எனவும், Assistant பணிக்கு 30 ஆகும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.150 பதிவு கட்டணமாகவும், ரூ.100 தேர்வு கட்டணமாகவும் வசூலிக்கப்படும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 21.09.2022 தேதிக்குள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:NIPER நிறுவனத்தில்Veterinary Officer காலிப்பணியிடங்கள்...நாளை கடைசி நாள்