சென்னை:பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 79 ஆயிரத்து 735 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டிலிருந்த 1146 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 25 லட்சத்து 61 ஆயிரத்து 662 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 34 லட்சத்து 42 ஆயிரத்து 929 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. அவர்களில் தற்போது 20 ஆயிரத்து 681 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.