தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 23,443 பேருக்கு கரோனா பாதிப்பு - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Jan 17, 2022, 9:54 PM IST

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,35,751 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 23,443 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்தப்பாதிப்பு 29,63,366 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது 1,52,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 13,551 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால் இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,009 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 8,591 பேருக்கும், செங்கல்பட்டில் 2,236 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,042 பேருக்கும், கன்னியாகுமரியில் 831 பேருக்கும், திருவள்ளூரில் 1,018 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Alanganallur Jallikattu: 21 காளைகளை வென்ற கார்த்திக் சிறந்த வீரராக தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details