சென்னை:ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று(ஏப்ரல் 8) பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, அசல் மௌலானா உள்ளிட்ட பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "முதல்முறையாக அராஜக ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு ஒரு ஜோடிக்கபட்ட வழக்கு. அவருக்கு சூரத்தில் தீப்பு வழங்கிய பிறகு அவர் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொண்டார்.
புதன்கிழமை எப்பொழுதும் இரு அவைக்கும் வருவார். அதுவும் முறையாக வராமல், தேசிய கீதம் ஒலிக்கும் போது மட்டும் வருவார். அப்படி இந்த வாரம் வரும் போது, நாங்கள் ரூ. 20,000 கோடி யாருடையது என்று கேட்டோம். அப்போது செத்த முகம் போல வந்து அமர்ந்து கொண்டு இருந்தார். பல அரசியல் வாதிகள் அரசு குடி இருப்பில் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் சார்ந்த பலர் இன்னும் வசித்து கொண்டு இருக்கிறார். அவர்களை இன்னும் ஏன் காலி செய்ய சொல்லவில்லை. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். அதை நாம் சபதமாக எடுப்போம்" என தெரிவித்தார்.